What Rajinikanth Did Before Conductor Job?

அலுவலகம் ஒன்றில் பியூனாக வேலை செய்தேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: “இளம் வயதில் எல்லாவற்றிலும் எல்லோருக்கும் ஆர்வம் இருக்கும். நானும் அந்த இளம் வயதில் ஆர்வமாகவே கற்றுக் கொண்டிருந்தேன். விருப்பம் இல்லாவிட்டாலும் எதிலும் மனம் பதியும் வயது இளம் வயதுதான். எனக்கும் அது மாதிரிதான்.
கண்டக்டராக இருந்து ரஜினி சூப்பர் ஸ்டார் ஆனார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் கண்டக்டர் வேலைக்கு வருவதற்கு முன் பல இடங்களில் வேலை தேடி அலைந்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் அலுவலகம் ஒன்றில் பியூனாக வேலை செய்தேன். பிறகுதான் கண்டக்டர் ஆனேன். நண்பன் ராஜ்பகதூர்தான் இந்த ரஜினிக்கு நடிப்பு திறமை இருக்கிறதென கண்டறிந்து அவருடைய செலவில் நடிப்புக் கல்லூரியில் சேர்த்துவிட்டார்.
எல்லாவற்றையுமó இப்போதும் விரும்பித்தான் கற்றுக் கொண்டிருக்கிறேன். இன்னும் நீங்கள் கற்றுக் கொண்டிருக்கிறீர்களா? என்கிறார்கள். ஆனால் நான் ஆன்மிகத்தை நாடுகிறேன். அமைதியை தேடுகிறேன். சந்தோஷம் வரும், போகும். ஆனால் நிரந்தரமாக இருப்பது அமைதி மட்டும்தான்.”என்றார்





thumbnail
About The Author

Ut dignissim aliquet nibh tristique hendrerit. Donec ullamcorper nulla quis metus vulputate id placerat augue eleifend. Aenean venenatis consectetur orci, sit amet ultricies magna sagittis vel. Nulla non diam nisi, ut ultrices massa. Pellentesque sed nisl metus. Praesent a mi vel ante molestie venenatis.

0 comments